தலவாக்கலை பி.கேதீஸ்-
வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் மத்திய மாகாண விவசாய அமைச்சின் 100 இலட்சம் ரூபா நிதியில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தை மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் விவசாய அமைச்சருமாகிய துமிந்த திசாநாயக்க மற்றும் கடற்றொழில்,நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் 28.10.2017 சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
மேலும் இதன்போது இந்தக் குளத்தில் இரண்டாயிரம் மீன்குஞ்சுகள் இடப்பட்டதுடன் மேற்படி குளத்து நீரினூடாக மடக்கும்புர தோட்டம் மற்றும் அப்பகுதி கிராமத்தை சேர்ந்த 3000 விவசாய குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.இந் நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டதை இங்கு காணலாம்.