கடந்த கலத்தில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்ததில் விட்ட தவறை இனியும் செய்ய மாட்டேன் என பதுளைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேலு சுரேஸ் தெரிவித்தார் எங்கள் நிலத்தில் எங்கள் வீடு எனும் தொனிப்பொருளில் பெருந்தோட்டங்களை சேர்ந்த 2865 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அட்டன் டன்பார் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுயில் மலையக மக்கள் இன்று உரிமையையும் கௌவத்தையும் பெற்ற சமுகமாக மாறி வருகின்றது இதற்கு நுவரெலியா மாவட்ட மக்களுக்கே நன்றியை சொல்ல வேண்டு கடந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகளை வழங்கி திகாம்பரம் அவர்களை அமைச்சராக்கி அவரின் அமைச்சினூடாக மலையக சமூகம் தலை நிமிர்ந்து வாழும் பல அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்று வருகின்றது.
கடந்த காலத்தில் வீடுகள் எங்களுடையது நிலம் தோட்ட நிர்வாகத்தினுடையது லயன் வீட்டுக்கு கூறை மாற்றம்போது கூரைத்தகரம் நிர்வாகத்திற்கு சொந்தம் வீட்டு மலசலகூடத்திற்கு குழி பரிக்க முடியாது ஆனால் இன்று சொத்த நிலத்தில் சொந்த வீடு இந்த திட்டம் மலையகம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடந்த தாசாப்த காலமாக அரசியல் செய்த சிலர் இன்று திகாம்பரம் செய்து வரும் வேலைத்திட்டத்திற்கு அவர்கள் பெயர்வைக்க முயல்கின்றனர் இனிவரும் காலங்களில் அமைச்சர் திகாம்பரத்தின் கரங்களை பலப்படுத்தி எமது உரிமையை மேலும் பெற்றுகொள்ளவதோடு இன்று இந்தமேடையில் தமிழ் சிங்களம் முஸ்லிம் என மூவின மக்களும் அமர்ந்துளோம் ஆனால் சிலர் ககல்யாணத்திற்கு சென்றாலும் நானே மாப்பிள்ளை செத்த வீட்டிற்று சென்றாலும் நானே பினம் என்று நினைப்பவர்கள் மக்கள் துடைத்தெரியவேண்டும்எனவும் தெரிவித்தார் மேலும் கடந்த காலத்தில் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திட்டதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை உணர்கின்றேன் இனி வரும் காலங்களில் மக்கள் சக்தியை கொண்டமுற்போக்குகூட்னியினருடன் கலந்துரையாடியே கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றார்.