கம்பளையில் காணாமல் போன 45 லட்சம் ருபா பெருமதியான டிப்பர் லொறி நிட்டம்புவயில் மீட்பு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-

ம்பளை பகுதியில் காணாமல் போன 45 லட்சம் ரூபா பெருமதியான டிப்பர் லொறி நிட்டம்புவ பகுதியில் மீட்கப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர் .

நிட்டம்புவ உடாம்பிட்டிய பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியொன்றிலே டிப்பர் லொறி 06.10.2017 மீட்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 2 ம் திகதி கம்பளை பொலிஸ் நிலையத்தில் குறித்த லொறியின் உரிமையாளரினால் தனது லொறி காணாமல்போனதாக முறைபாடு செய்யப்பட்டிருந்த நிலையிலே நிட்டம்புவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது .

அன்மைய காலத்தில் பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன வாகனங்கள் சில பூண்டுலோயா பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரையும் கைது செய்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலமே மேற்படி டிப்பர் லொறி நிட்டம்புவ பகுதியிலிருந்து மீட்டகப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.


மீட்கப்பட்ட டிப்பர் லொறியின் செசி. எஞ்சின்.உட்பட லொறியின் இலக்கம் ஆகியன மாற்றப்பட்டு மோட்டர் வாகன திணைக்களத்தில் போலி இலைக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.


குறித்த லொறியை 40 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த போதே பூண்டுலோயா பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு மீட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக டிப்பர் லொறியை கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்தசுரவீர தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -