வவுனியா மாவட்ட தெற்கு கல்வி வலயத்தில் ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயம் அமைந்துள்ளது. தரம் 5 வரை கொண்ட இப்பாடசலையில் சுமார் 45 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
47 வருடங்களின் பின்னர் முதன் முதலாக 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளைப்பெற்று சித்தி பெற்று பாடசாலைக்கும் தனது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். "மொகமட் அஸ்வர் பாத்திமா சல்ஹா"
பாடசாலையின் அதிபர் கே.எம்.அனீஸ் அவர்களின் வழிகாட்டலும், ஆசிரியர்களின் நெரிப்படுத்தலும், பெற்றோரின் ஊக்குவிப்புமே பாத்திமா சல்ஹாவின் வெற்றிக்கு காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
பாத்திமா சல்ஹாவை நாமும் வாழத்துகின்றோம்.