கண்டி மாவட்டத்தில் 18.5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று நீர் வழங்கல் திட்டங்கள் சனிக்கிழமை ஆரம்பித்துவைத்த பின்னர், தலாதுஓயா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
குண்டசாலை - ஹாரகம குடிநீர் திட்டத்துக்காக 23,000 மில்லியன் ரூபாவும், கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டத்துக்காக 33,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இவ்விரு நீர் வழங்கல் திட்டங்கள் மூலம் 7 இலட்சம் பேர் பயனடையவுள்ளனர். மேலும், தெல்தொட்ட பிரதேசத்திற்கான குடிநீர் திட்டமொன்றை லூல்கந்துர நீர் வீழ்ச்சியின் நீர் மூலமாக கொண்டு ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.
வெலம்பொட பகுதியிலுள்ள கொன்டியாதெனிய அல்டன்வத்தை பிரதேசத்தில் 3.5 மில்லியன் ரூபா செலவில் 100 குடும்பங்களுக்கும், கடுகண்ணாவையில் பலான –மொட்டான பிரதேசத்தில் 10.5 மில்லியன் ரூபா செலவில் 1000 குடும்பங்களுக்கும், முடுனேகட – தலாதுஓயா பிரதேசத்தில் 4.5 மில்லியன் ரூபா செலவில் 450 குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன. இதன்போது மதஸ்தலங்களுக்கு நீர்த்தாங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, வேலுகுமார், மாகாணசபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், மகிந்த அபயக்கோன், சாந்தானி கோங்காஹகே, காமினி விஜயபண்டார, மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நயீமுல்லாஹ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.