காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்தின் 58 விளையாட்டுத்துறைச்சார் உத்தியோகத்தர்களு/்கா- ஜந்து(5) நாள் அறிவு இற்றைப்படுத்தல் (Knowledge updating Program me)பயிற்சிநெறி ஊவாவிலுள்ள பல்கஹதென்ன பயிற்சி நிலையத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனம் இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்நிகழ்ச்சித்திட்டம் இன்று 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை 5 தினங்கள் நடைபெறவுள்ளது.
நாடளாவியரீதியில் மாவட்ட விளையாட்டுத்தறை உத்தியோகத்தர் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் பயிற்றுனர்கள் பணிப்பாளர்கள் எனத் தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு கட்டம் கட்டமாக இந்நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்று வருகின்றது.
தற்போது கிழக்குமாகாண விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சி நடைபெற்றுவருவதாக நிறுவனப் பணிப்பாளர் ஜி.எல்.சஜித்ஜெயலால் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் நா.மதிவண்ணன் ஏற்பாட்டில் திருமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.