ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புப்பேரணி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , டீ.வீ.சானக பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேர் நேற்று மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர , உபாலி கெடிகார , சம்பத் அதுக்கோரள மற்றும் அஜீத் பிரசன்ன உள்ளிட்ட 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -