பைஷல் இஸ்மாயில் -
அக்கரைப்பற்று 6 ஆம் பிரிவில் வசிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவாகவும், தாகமாகவும் இருந்து வந்த எம்.சி.சி.குறுக்கு வீதிக்கு 3 மில்லியன் ரூபா நிதியில் கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி. அன்வர்டீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரீ.ஜாரியா தலைமையில் இன்று மாலை (26) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி. அன்வர்டீன் கலந்துகொண்டு குறித்த விதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
குறித்த வீதியில் வசித்து வந்த மக்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த வீதி கொங்றீட் வீதியாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையும் அவர்களின் நீண்டகால கனவுக்கும், தாகத்துக்கும் முற்றுப்புள்ளியையும் வைத்தார்.
அதுமாத்திரமல்லாமல் கடந்த ஒரு மாத காலத்துக்குள் 6 கோடி 91 இலட்சம் செலவில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த பல வீதிகளை கொங்றீட் வீதிகளாக நிர்மாணித்துக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், அக்கரைப்பற்று அரசடி வீதி 30 இலட்சம் ரூபா செலவிலும், எம்.சீ.சீ. குறுக்கு வீதி 30 இலட்சம் ரூபா செலவிலும், தேசிய பாடசாலை வீதி 86 இலட்சம் ரூபா செலவிலும், உப தபாலக வீதி 1 கோடி ரூபா செலவிலும், உப தபாலக 4 ஆம் குறுக்கு வீதி 80 இலட்சம் ரூபா செலவிலும், உப தபாலக 5 குறுக்கு வீதி 75 இலட்சம் ரூபா செலவிலும், ஆதார வைத்தியசாலை வீதி 50 இலட்சம் ரூபா செலவிலும், ஆலிம் வீதி 50 இலட்சம் ரூபா செலவிலும்,பெறிய பள்ளி வீதி 50 இலட்சம் ரூபா செலவிலும், ஜின்னா வீதி 30 இலட்சம் ரூபா செலவிலும், ஹாசிம் ஆலிம் வீதி 30 இலட்சம் ரூபா செலவிலும், வம்மியடி வீதி 30 இலட்சம் ரூபா செலவிலும், மத்திய மகா வித்தியாலய 5 ஆம் குறுக்கு வீதி 50 இலட்சம் ரூபா செலவில் இந்த வீதிகள் யாவும் கொங்றீட் வீதிகளாக செப்பனிடப்பட்டதும் விஷேட அம்சமாகும்.