இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 70 வீதமானவை தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன

லங்கையில் ஏற்படும் மரணங்களில் 70 வீதமானவை தொற்றா நோய்களினாயே ஏற்படுகின்றன. இதில் 40 வீதமானவை இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுகின்றது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுத்தின் தெரிவித்தார்.

உலக இருதய தினத்தையொட்டி கல்முனையில் இடம்பெற்ற மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு உரை நிகழ்த்தும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலங்களில் தொற்றா நோய்களின் தாக்கம் இலங்கை போன்ற அபிவிருத்தி அமைந்துவரும் நாடுகளிலும், உலக நாடுகளிலும் மிக அதிகமாக காணப்படுகின்றது. இந்நிலைமையினை கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் தாபனம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி உலக இருதய தினமாக பிரகனப்படுத்தி இத்தினத்தை அனுஷ்டித்தும் வருகின்றது.

இலங்கை அரசு இத்தினத்தை “சக்தியை பகிர்வோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய ரீதியான முன்னெடுப்புக்களை முன்னெடுத்து இத்தினத்துக்காக பல கோடிக்கணக்கான நிதியினையும் செலவும் செய்து வருகின்றது. இதன் மூலம், எம்மிடையே இளம் பருவத்தில் இருதய நோய்களினால் ஏற்படும் மரணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக இள வயது மரணங்களை தடுக்க முடியும்.

அதுமாத்திரமல்லாமல், இத்தினத்தை முன்னிட்டு இருதய நோய் தொடர்பான பல அறிவித்தல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், பிரச்சாரங்கள், அறிவித்தல்கள் போன்ற பல வழிகளில் பொதுக்களுக்கு விழிப்புணர்வுகளை கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையினால் நாம் முன்னெடுத்து வருகின்றோம். என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -