அஸீம் கிலாப்தீன்-
குறித்த அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் பாராளுமன்ற முறைமை நடைமுறைக்கு வந்து எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு 70 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று(03) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. அன்றைய தினமே முதலாவது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
அரச பேரவையில் முதலாவது சபாநாயகராக பிரான்சிஸ் மொலமூரே தெரிவு செய்யப்படடார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் கடந்த 70 வருடங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்வாங்கியுள்ளது.
1947ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை பாராளுமன்றம் காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்தது. அதன் பின்னர் சுமார் 35 வருடங்களாக ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் பாராளுமன்றம் இயங்கி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.