காரைதீவு நிருபர் சகா-
நேற்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறுகளினடிப்படையில் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் 75 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் அருட்சகோ.சந்தியாகு தெரிவித்தார்.
கல்லூரி வரலாற்றில் 75 மாணவர்கள் ஒரேதடவையில் சித்தியெய்திருப்பது இது முதற்றடவையாகும்.
அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் நிலையிலுள்ள இரண்டு மாணவர்களும் இதே பாடசாலையைச்சேர்ந்தவர்களாவர்.
186 புள்ளிகளைப்பெற்ற செல்வன் விமலராஜ் ஜெஸ்னு தவராஜா துர்க்ஸாந்த் ஆகியோரே மாவட்டத்தின் மூன்றாம் நிலையிலுள்ள மாணவர்களாவர்.
இந்த வரலாற்றுப்பெறுபேற்றினை பெற உதவிய மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் அபிவிருத்திச்சபையினர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் என அதிபர் அருட்சகோ.சந்தியாகு தெரிவித்துள்ளார்.
கடந்தவருடம்கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் 68மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -