பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச்ஸ் கொண்ட காணியுடனான வீடு

ங்கள் நிலத்தில் - எங்கள் காணி' என்ற தலைப்பில் எமது அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச்ஸ் கொண்ட காணியுடனான வீடு வழங்குவதுடன் அதற்கான காணி உறுதிகளையும் வழங்கி வந்ததுள்ளது.

இதன் முதற்கட்டமாக நுவரெலியா வூட்வில் தோட்டத்தில் வீடுகளுக்கான காணி உறுதிகளை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 09.02.2017 அன்று வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மாத்தறை உலந்தாவ தோட்டத்தில் வீடுகளுக்கான காணி உறுதிகளை கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 17.08.2017அன்று வழங்கப்பட்டது.

இதன் மூன்றாம் கட்டமாக இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2864 காணி உறுதிகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் விசேட வைபவம் 29.10.2017 தினத்தன்று கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஹட்டன் டன்பார் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிகள் அம்மாவட்டங்களில் நடைபெறும் வைபவத்தின் போது வழங்கப்படும். இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிகளை வழங்கப்படவுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அவிபிருத்தி அமைச்சின் ஊடாக 5000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.


திகதி : 29.10.2017
நேரம் : பி.ப. 10.00
இடம் : ஹட்டன் 'டன்பார்' விளையாட்டு மைதானம்

பிரதம அதிதி : கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்

அதிதிகள் : மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள்

கௌரவ அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள்
கௌரவ அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்கள்
கௌரவ அமைச்சர் மனோகணேஷன் அவர்கள்
கௌரவ இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷணன் அவர்கள்

மேற்குறிப்பிட்ட நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக தங்களது நிறுவனத்திலிருந்து ஊடகவியலாளர்களை அனுப்பி இந்நிகழ்வினை வெற்றிபெற ஒத்துழைக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு,
அருண ரத்னாயக்க,
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -