அமைச்சர் றிஷாதினால் வவுனியா தமிழ்ப் பிரதேசங்களில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகள்



ஊடகப்பிரிவு-

வுனியா மாவட்ட தமிழ் பிரதேங்களில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.

இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் அமைச்சரின் வேலைத்திட்டத்திற்கமைய வவுனியா தெற்கு இலுப்பைக்குளம், கூமாங்குளம், நெளுக்குளம், சமயபுரம், மகிழங்குளம், அண்ணா நகர், புளியங்குளம் (வவுனியா வடக்கு) ஆகிய கிராமங்களிலுள்ள யுவதிகள் பயன்பெறும் வகையிலேயே முதற்கட்டமாக 5 நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஏனைய 3 நிலையங்களும் வெகுவிரையில் திறந்து வைகப்படவுள்ளது.

தேர்தல் காலங்களில் அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறித்த சிறுஆடைத்தொழிற்சாலைகளுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்ட்டு ஆறு மாத கால இலவச பயிற்சியுடன் குறித்த ஆடைத்தொழிற்சாலை இயங்கவுள்ளது.

இவ்வங்குரார்ப்பண நிகழ்வுகளில் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எஸ்.எம்.மொகைதீன், மாவட்ட இணைப்பாளர்களான முத்து முஹம்மட், அப்துல் பாரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜோர்ஜ், அமைச்சரின் தமிழ் பிரதேச இணைப்பாளர் ஆனந்தன், மகளிர் பிரிவைச் சேர்ந்த ஜிப்ரியா, கனஹா மற்றும் குறித்த கிராமங்களின் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -