அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் (ACMYC) இலங்கையிலுள்ள மத்தரஸாக்களில் அல்-குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளு மாணவர்களுக்கு இலவசமாக அல்-குர்ஆன் பிரதிகள் கடந்த வருடம்(2016) 40 மத்ரஸாக்களில் உள்ள 1500 ஹிப்ழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக இவ்வருடமும்(2017) ஹிப்ழ் மாணவர்களுக்கு 1000 புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு (ACMYC) ஒன்றியத்தின் தலைவர் என்.எம் நஜாத் தலைமையிலான ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள 30மத்தரஸாக்களுக்கு நேரடியாகச் சென்று குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தனர்.