இலவச கணினி திருத்துதல் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆலோசனை செயலமர்வு - BCAS கல்முனை வளாகம்



லவச கணினி திருத்துதல் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆலோசனை செயலமர்வு, 25.10.2017 அன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரைஅக்கரைப்பற்று பிரதேச செயலக முன்றலில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது BCAS கல்முனை வளாகத்தில் கணினி உயர் தேசிய டிப்ளோமா (BTEC HND in Computing) பாடநெறியினை தொடர்கின்ற மாணவர்களால்நிறுவகிக்கப்படுகின்ற IT Society of BCAS Kalmunai Campus யினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய உதவி பிரதேச செயலாளர்அவர்கள் இவ்வாறான தொழிநுட்பம் சார்ந்த சேவைகள் சமூகமட்டத்தில் பரவலாக இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டதோடு இவ்வாறான நிகழ்வினைஅக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்தமைக்காக பாராட்டினையும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்விலே, பொதுமக்களால் கொண்டுவரப்பட்ட சுமார் 70க்கு மேற்பட்ட கணினிகள் அவ்விடத்திலேயே இலவசமாக திருத்தம் செய்துகொடுக்கப்பட்டதோடு, செயலிழந்த உதிரிப்பாகங்களை மாற்றீடு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்விலே மாணவர்களோடு, சிரேஷ்ட விரிவுரையாளர்களான முஹம்மட் நிஷாட், முஹம்மட் இஸ்ராக் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி ரிஷாட்வஹாப் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தேவையான மேலதிக வழிகாட்டல்களை வழங்கினர்.

குறித்த நிகழ்விலே நேர வரையறை காரணமாக இறுதி நேரத்திலே கொண்டுவரப்பட்ட கணினிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இவ்வாறான இலவசசேவையானது பொதுமக்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருப்பதின் காரணமாக எதிர்வரும் காலங்களிலும் BCAS கல்முனை வளாகமானது இவ்வாறானஇலவச சேவைகளை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் நிறுவன மட்டங்களில் மேற்கொள்ள உத்ததேசித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -