முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியின் பலனாக கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு கோடி ரூபாய் செலவில் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்திற்கான இரண்டு மாடிக் கட்டிடத் தொகுதி, இரண்டு கோடி ரூபாய் செலவில் காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் வித்தியாலயத்திற்கான இரண்டு மாடிக் கட்டடத் தொகுதி மற்றும் சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக் கட்டிடத்தொகுதி என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டங்கள் மிக விரைவில் பூரணப்படுத்தப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்படவுள்ள நிலையில் குறித்த கட்டிடத் தொகுதிகளுக்காக பெயர்களை சூட்டுவதற்காக தீர்மானிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பணிப்புரைக்கமைய மெத்தைப்பள்ளி வித்தியாலய கட்டிடத் தொகுதிக்கு "அஷ் ஷஹீட் அஹமட்லெப்பை கட்டிடத் தொகுதி" என்றும், அன்வர் வித்தியாலயம் மற்றும் ஜாமியுள் ஆபிரீன் பாடசாலை கட்டிட தொகுதிகளுக்கு சங்கைக்குரிய அல்ஹாஜ் "ஷெய்ஹுல் பலாஹ் கட்டிடத் தொகுதி" என்றும் பெயர் சூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பாடசாலைக் கட்டிடங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களுக்கு எவ்வித இலாப நோக்கமுமற்ற விதத்தில் சமூகத்திற்காக சேவையாற்றி மறைந்த பெரியார்களின் பெயர்களைச் சூட்டுவதானது அவர்களின் விலைமதிப்பற்ற சேவையினை கௌரவிப்பதாக அமைந்துள்ளதோடு அரசியல் இலாப நோக்கங்களிற்காக மக்களின் பணங்களினூடாக நிர்மாணிக்கப்படும் பொதுக் கட்டிடங்களுக்கு அரசியல் வாதிகள் தங்களுடைய பெயர்களை சூட்டிக்கொள்ளும் அரசியல் கலாச்சாரத்திற்கெதிரான சிறந்த முன்னுதாரணமாகவும் இது அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -