அமைச்ச‌ர் ஹ‌க்கீம்,அமைச்ச‌ர் ரிசாத், ஆசாத் சாலி ஆகியோர் அர‌சிய‌லில் இருந்து ஒதுங்குவார்க‌ளா..- என‌ முஸ்லிம் விடுத‌லை முன்ன‌ணி




மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷன் நடாத்திய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் தனதாக்கிக் கொண்டனர்.

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு இன்று (30) சனிக்கிழமை மாலை பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது பொத்துவில் எலைட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் விளையாடினர்.

பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷனின் தலைவர் என்.ரி. ராசுதீன் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டி நிகிழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஷித், பொத்துவில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றனர். வெற்றி இலக்கான 85 ஒட்டங்களை பெறும்வகையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எலைட் விளையாட்டுக் கழகத்தினர் சகல பந்துவீச்சுக்களும் நிறைவடைந்த நிலையில் 6 விக்கட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இப்போட்டியில் மேலதிக 25 ஓட்டங்களால் பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை கொட்டுக்கல் எஸ்.ஆர் விளையாட்டுக் கழக வீரர் எம். அறபாத்தும், சிறந்த அணிக்கான விருதை ஹுதா விளையாட்டுக் கழகமும், தொடரின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை எலைட் விளையாட்டுக் கழக வீரர் எம். றியாசும், ஆட்ட நாயகன் விருதை றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர் எம். பாறுக்கும் பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -