குர்தீஸ்தான் கொன்சியூளரிடம் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு


ஊடகப்பிரிவு-

குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டாக்டர் அஹமட் ஜலால் அவர்களை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (13.10.2017) அவரது அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார்.

இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பொருளாதார விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில் கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டாக்டர் அஹமட் அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.

இலங்கை தொழிலாளர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என கூறிய டாக்டர் தமது நாட்டில் அவர்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குர்தீஸ்தானின் புதிய கொன்சியூளராக நியமிக்கப்பட்ட டாக்டர் அஹமட் அவர்களுக்கு அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -