க.கிஷாந்தன்-
“புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அட்டன் நகரில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது.
இத் துண்டு பிரசுரத்தில் நிறைவேறாத கனவுகள், சம்பளம் துண்டிப்பு, வருமான பகிர்வு, மரண பொறி என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
01.10.2017 அன்று காலை இந்த துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை அட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள அரச மரத்தடியிலிருந்து ஆரம்பமானது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் பங்குபற்றி கொண்டமை குறிப்பிடதக்கது.