நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவீயலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். நூலின் முதற்பிரதியை அல்ஹாஜ் M A Mஇக்ராம் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக
அல்ஹாஜ் ஸிராஜ் ஸகரிய்யா (CML MTD நிறுவனம்) , லேக்ஹவுஸ்
தமிழ்ப் பிரிவு ஆலோசகர் கலாபூஷணம் நிலாம் அவர்கள் மற்றும் அல்ஹாஜ் ரூன் அன்வர்களும் கலந்து கொண்டனர்.
நூல் ஆசிரியர் அறிமுகத்தை தாருஸ் ஸலாம் கல்லூரியின் பிரதி
அதிபர் அஸாம் ஆசிரியர் நிகழ்த்தினார்.நூல் விமர்சனத்தை மேமன் கவி அவர்கள் நிகழ்த்தியதோடு நயவுரையை கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் நிகழ்த்த வாழ்த்துரைகளை கலாபூஷணம் மு. பஷீர் அவர்களும் கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்களும் நிகழ்த்தினர். கவிவாழ்த்து சந்தக் கவிமணி கிண்ணியா
அமீர் அலி அவர்களால் பாடப்பட்டது.
கவிஞர்கள் கலைஞர்கள் புத்திஜீவிள், அதிபர்கள், ஆசிரியர்கள்,ஊர்மக்கள் என மண்டபம் நிறைந்த ஒரு நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும்.