அவரது ஊரக பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
எமது ஆட்சிக் காலத்தில் பல விடயங்கள் சிறந்த முறையில், முறையானதிட்டமிடல்களோடு செய்து கொடுக்கப்பட்ட போதும் அவற்றை இவ்வரசுபேணிக்கொள்ளவில்லை.அவற்றில் ஒன்றாக நெல் விவசாயத்தை சுட்டிக்காட்டலாம்.எமதுஆட்சிக் காலத்தில் நெல் உற்பத்தியானது தன்னிறைவடைந்திருந்தது.
மேலதிகமாக விளைவாக்கப்பட்ட நெல்லை என்ன செய்வது என்று நாம் சிந்திந்தோம்.கோதுமை மாவின் பயன்பாட்டை குறைத்து அரிசி மாவின் பயன்பாட்டை கூட்டி அதிக நெல்விளைச்சலை எதிர்கொள்ள திட்டங்களை அமுல் படுத்தி இருந்தோம். வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்யவும் உத்தேசித்திருந்தோம்.
இவ்வரசு காலத்தில் அரிசி தட்டுப்பாடு நிலவ இன்னுமொரு பிரதான காரணமுள்ளது.தற்போதைய ஜனாதிபதியின் சகோதரர் தான் அரிசி மாபியாவின் முக்கிய நபர். இதனைநான் மாத்திரம் சொல்லவில்லை. எமது ஆட்சி காலப்பகுதியில் எம்மை விமர்சிக்க பிரதமர்ரணில், ஜே.வி.பி ஆகியன கூட கூறியிருந்தன.
இவர்கள் உள்நாட்டு அரிசிகளை வாங்கி பதுக்கி வைப்பார்கள். வெளிநாட்டு அரிசிகளைகுறைந்த விலையில் அரசினூடாக இறக்குமதி செய்வார்கள். இரண்டையும் ஒன்றாககலந்து உள்நாட்டு அரிசியாக கூடிய விலைக்கு விற்பனை செய்வார்கள். எமது ஆட்சிக்காலத்திலும் இப்படியான செயற்பாடுகள் இடம்பெற்றன. இந்த அரிசி மாபியா செயல்தான்வரலாற்றில் என்றுமில்லாதவாறு கூடுதலான அரிசியை இறக்குமதி செய்ய காரணமாகும்.அன்று அவற்றுக்கு நாம் இடம் கொடுக்கவில்லை. இப்போது நாங்கள் இடம் கொடுக்கத்தேவையில்லையே? அவர்களே எடுத்துக் கொள்ளலாமே!
இந்த அரசானது அரிசி தட்டுப்பாட்டை நீக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்கிறது.வெளிநாடுகளுக்கு உழைத்து கொடுப்பதிலும் தாங்கள் உழைத்துகொள்வதிலும்இவ்வரசுக்கு அப்படி பிரியம். இதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைகுற்றம் சுமத்தினாலும் சுமத்துவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தனதுசெயற்பாட்டை அமைத்திருந்ததால் சிறந்த விளைச்சல் கிடைத்தது. இவ்ஆட்சியாளர்களால் அப்படியான சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கமுடியவில்லை.நாம் அரிசி மாபியாவுக்கு இடமளித்திருக்கவில்லை.விவசாயிகளின்வீழ்ச்சிக்கு ஜனாதிபதியும் இந்த அரசும் காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.