பத்தனை போகாவத்தை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்






க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை போகாவத்தை தோட்டத்தில் தொழிலாளி பெண் ஒருவர் தொழில் நடவடிக்கையின் போது தீடிரென மாரடைப்பினால் உயிரிழந்ததை கண்டித்து அத் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் 31.10.2017 அன்று பத்தனை போகாவத்தை தோட்டத்தில் தொழில் புரியும் தோட்ட தொழிலாளர்களினால் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னபாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், இத் தோட்டத்தில் மேலதிக கொழுந்து பறிக்கும் நடவடிக்கைக்காக பெண் தொழிலாளர்களை ஈடுப்படுத்திய போது அவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் பாண் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட பாணை உட்கொண்ட பெண் தொழிலாளி ஒருவர் குடிநீர் அருந்துவதற்கு வசதி அற்ற நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்மணியை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

போகாவத்தை தோட்டத்தில் அம்புலன்ஸ் வண்டி இல்லாததன் காரணமாக குறித்த நேரத்தில் பெண்ணை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இவரின் உயிர் பிறிந்திருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இத்தோட்ட தொழிலாளியான எம். தனலெட்சுமி வயது 59 இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், இந்த உயிரிழந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் தோட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வழியுறுத்தி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -