அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை





அகமட் எஸ். முகைடீன்-

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை இருவார காலத்திற்குள் நிவர்த்திக்குமாறு ஒப்பந்தகார நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரைவிடுத்துள்ளார்.


குறித்த நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அவற்றை நிவர்த்திப்பதற்கும் பாடசாலை மைதானத்தின் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு இன்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம்செய்தபோது மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


இவ்விஜயத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், பாடசாலை அதிபர் அஸ்-ஷேஹ் யு.எல். மன்சூர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.


இதன்போது நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அதற்கான தீர்வினை வழங்கியதோடு பாடசாலை விளையாட்டு மைதானத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து தருவதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.


மேலும் பாடசாலைக்கான பேன்ட் வாத்தியக் கருவிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்குமாறு அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் ஹரீஸ் கடின பந்து விளையாட்டு உபகரணங்களையும் பேன்ட் வாத்தியக் கருவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.


அத்தோடு குறித்த நீச்சல் தடாகத்தின் மூலம் பிரதேச மாணவர்கள் நன்மையடையும் வகையிலான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நீச்சல் தடாக பராமரிப்பை உரியமுறையில் மேற்கொள்வதற்குமான ஆலோசனைகளை விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவினர் இதன்போது வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -