ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹீஜா முஸாபிர், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மௌலவி யு.கே. ஜபீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹமீட், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கிராம சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 62 குடும்பபங்களுக்கான பயனாளிகளுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் தையல் இயந்திரம், கேஸ் சிலின்டர் உள்ளிட்ட அடுப்பு போன்ற உபகரணங்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.
அத்தோடு கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவையினை திறன்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட அலுவலக கைப்பை கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு இந்நிகழ்வின்போது பிரதி அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.