இம்மாத இறுதிக்குள் தமக்கான நியமனங்கைள வழங்கா விட்டால் போராட்டம் உக்கிரமடையும் -தொண்டர் ஆசிரியர்கள்

சியர் நியமனத்திற்காக தெரிவான தொண்டராசரியர்கள், இம்மாத இறுதிக்குள் தமக்கான நியமனங்கைள வழங்க வடமாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 1,058 வது அமர்வு நேற்று (26) நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வடமாகாண சபை முன்பாக இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரிய நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்கள் தமக்கான நியமனத்தினை வடமாகாண சபை உறுப்பினர்கள் தடுப்பதாக குற்றஞ்சாட்டி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

போராட்டத்தின் போது, அவர்கள் தெரிவிக்கையில், வேலையற்ற அநாகைளாக இருக்கின்றோம்; தொண்டராசியர்களுக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட போதிலும் 182 பேரை மத்திய மாகாணம் அமைச்சு தெரிவு செய்திருந்தது.

மத்திய மாகாண அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 182 தொண்டராசிரியர்களின் தெரிவிலும் குளறுபடிகள் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் கூறி அரசியல் காழ்ப்புணர்சிக்காகவும், உறுப்பினர்களுக்கிடையில் உள்ள விரோதம் காரணமாகவும் எமது நியமனத்தினை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது குரோதங்களை நிறுத்தி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய எமக்கு உடனடியாக நியமனத்தினை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவு செய்யப்படாத ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

எமது நியமனத்தினை இழுத்தடிப்பதன் மூலமாக எமது வாழ்க்கையை அழிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

வடமாகாண சபைக்கு வாக்களித்து அனுப்பிய எம்மை எமது கத்தி எடுத்து எமது வயிற்றினையே குத்திக் கிழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றீர்கள்.

இம்மாத இறுதிக்குள் தொண்டராசிரியர்களின் நியமனங்களை உடனடியாக வழங்கி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

தமக்கான நியமனம் கிடைக்காவிடின் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தொண்டராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -