அகமட் எஸ். முகைடீன்-
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியின் குறைபாடுகளை பார்வையிட்டு அதற்கான தீர்வினை வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு குறித்த விளையாட்டு கட்டத் தொகுதிக்கு நேற்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம்செய்தது.
இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, மட்டக்களப்பு மாநகர சபை பொறியியலாளர் தேவ தீபன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
சகல விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான ஒன்றாக காணப்படும் ஜிம் பயிற்சியினை மேற்க்கொள்வதற்கான நிலையம் ஒன்றை இவ்விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைப்பதற்கு இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மேலும் குறித்த விளையாட்டு கட்டடத் தொகுதியின் மூலம் விளையாட்டு வீரர்கள் நன்மையடையும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.