கல்முனை முஸ்லிம் மக்களை ஏமாற்ற ஹக்கீம் விடும் டுபாய் புரளி

எம்.எம்.நிலாம்டீன்- 

க்கீம் கட்சியின் சர்வ வல்லமை பொருந்திய தலைவர் ஹக்கீம் வையா எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்காக, வாக்கு வேட்டைக்காக கிழக்கு முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக எடுத்து விடப்பட்ட அடுத்த கட்ட நகர்வுதான் 'கல்முனையை டுபாயாக மாற்றுவோம் ' என்ற தேர்தல் குண்டாகும்.

ஏற்கனவே அம்பாரை மாவட்டத்தில் 'கரையோர மாவட்டம்' என்கிற ஒரு குண்டைப் போட்டார். அதற்கு மஹிந்த ஆட்சியிலும் எதிர்ப்புக் கிளம்பியது. தற்போது ரணில் ஆட்சியிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதில் கரையோர மாவட்டக் கோரிக்கையைத் தர முடியாவிட்டால், உடனடியாக மேலதிக மாவட்டச் செயலாளர் பணிமனையொன்று ஒன்று திறக்கப்பட வேண்டுமென்றும் மு.கா கோரியிருந்தது.

இப்பொது ஹக்கீம் சொல்லுகின்றார் கிழக்கு மாகாணத்திற்கு தனியான நிர்வாக அலகு வேண்டுமாம்.அதென்ன வடக்கு மாகாணத்திற்கு இல்லாத தனியான நிர்வாக அலகு.இதுவொல்லாம் நடக்கும் விடயமா? ஆயுதம் ஏந்திப் போராடிய மக்களுக்கே ஒன்றும் இல்லையாம் சீசன் டிக்கட் மனேஜர் ஹக்கீமுக்கு மட்டும் கிழக்கு நிர்வாக அலகு வேண்டுமாம்.இதைக் கேட்கும் போது நமக்கு நகைப்பும் நையாண்டியும்; வரவில்லையா?

ஆனால் எம்மைப் பொறுத்தளவில் முதலமைச்சர் பதவி என்பதை விடவும் கலையோர மாவட்ட விடயமே முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்விதமான சாதனையையும் சாதித்து விட முடியாது. அது வெறும் அலங்காரப் பதவியாகவே இருக்கும்.

வேண்டுமென்றால் முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைத்த கௌரவமான ஒரு பதவியாக அது இருக்கலாம். அது தனி மனிதனுக்கு முடிசூட்டும் விடயமாகவேயிருக்கும். இதைவிட, கரையோர மாவட்டம் கிடைத்தால் அது அம்பாரை மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கே முடிசூட்டும் விடயமாகவே பார்க்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யத்தக்கதாகவும் அது அமையும் என்று ஹசனலி கடந்த அப்போது தெரிவித்திருந்தார்.

அதாவது ஹக்கீமின் இலவச எம்பியாக என்ற போனஸ் எம்பியாக இருந்த போது ஹசன் அலி அப்போது இப்படியாகத்தான் ஹக்கீமுக்காக ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார்.

கரையோர மாவட்டக் கோரிக்கை

இதுவரை காலமும் கரையோர மாவட்டம் என்று சொல்லி வந்த மு.கா, கடந்த வருடம் 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்ற புதிய உசுப்பேற்றலை ஆரம்பித்திரந்தார்கள்.அது மஹிந்த ஆட்சியில் பாரிய எதிர்ப்;பை உருவாக்கியிருந்தது. இது 'முஸ்லிம் ஈழம்' மாதிரி இல்லையா? இது ஒரு நப்பாசை மாதிரியில்லையா?அதன் பின்புதான் கல்முனைக்கு சிங்கள பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டார்.

இந்த ஈழத்திற்கு சில அறிவிலிகள் ஆடுவார்கள். இது 'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி' என்றுதான் அப்போது அமைந்திருந்தது.இந்த முஸ்லிம் கரையோர மாவட்டம் என்பதன் எதிரொலி, முஸ்லிம் பிரதேசமெங்கும் சிங்களப் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட இருந்தது. நல்ல நேரம் ஆட்சி மாற்றத்தால் தப்பியது.

இதை இப்படியும் சொல்லலாம்;. தவளை தன்வாயால் கெடுமாம். மு.கா.சின் நிறைவேறாத நப்பாசையான கரையோர மாவட்டம் என்று கடந்த வருடம் எழுதியிருந்தோம். அந்த வகையில்தான் கல்முனைக்கு சிங்கள பிரதேச செயலாளர் நியமிக்கப்ட்டிருந்தார். புதிய ஆட்சியில் கல்முனை சிங்களப் பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது நடக்கும் விடயமா? ஏற்கனவே பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் கரையோர மாவட்டம் அல்ல முஸ்லிம் ஈழம் என்று ஒரு தேவையில்லாத வம்பையும், புரளியையும் தேர்தல் காலம் பார்த்து சீசன் வியாபாரமாக இவர்களே கிளப்பி விட்டுள்ளார்கள்.

நாம் முன்வைக்கும் சவால்
இந்த அரசில் மு.கா. மதிப்பும் மரியாதையுமாக இருந்தால் அம்பாரைக்கு ஒரு தமிழ் பேசும் அரசாங்க அதிபரைக் கொண்டு வர முடியுமா? அட்டானைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் ஏழை விவசாய மக்களின் பறிக்கப்பட்ட விவசாயக் காணிகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமா? அண்மையில் இராணுவத்தால் பறிக்கப்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் மக்களின் குடியிருப்புக் காணிகளை மீட்டுத்தர முடியுமா?

முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவி
கடந்த இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் மு.கா. தலைவர் ஹக்கீம் கிழக்கு முதலமைச்சர் பதவிக்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது இந்த ஹசனலிக்கு அந்த முதலமைச்சர் பதவி என்பது தனி நபரை திருப்திப்படுத்தும் அலங்காரப்பதவி என்று தெரியவில்லையா? முதலமைச்சர் பதவியால் எதையும் சாதிக்க முடியாது என்று அப்போது ஹசனலிக்குத் தெரியாதா? 'முதலமைச்சர் என்னும்; பொம்மை முதல்வர் ஆட்சியை ஒழிப்போம்' என்று தானே கிழக்கு மாகாணம் முழுவதும் மு.கா.சினர் பிரச்சாரம் செய்தார்கள். அதுதான் அஷ்ரப்பின் கனவு என்றெல்லாம் மக்களை ஏமாற்றினீர்கள். தமிழ் கூட்டமைப்பினர் கிழக்கு முதல்வர் பதவியை உங்களுக்குத் தருகின்றோம் என்று பகிரங்க அழைப்பு விடுத்த போதும், அதை நிராகரிக்கும் போதும் அது வெறும் பொம்மை முதல்வர் என்று இவர்களுக்குத் தெரியவில்லையா?

ஏற்கனவே இயங்கிய மேலதிக அரசாங்க அதிபர் பணிமனை

ஏற்கனவே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக 2005 ஆம் ஆண்டு கல்முனையில் தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த மேலதிக கரையோரக் கச்சேரியை மூடிவிடும்படி கடந்த 2009 ஆம் ஆண்டில் அரச உத்தரவொன்று கிடைத்ததனால் அது மூடப்பட்டு விட்டது. சுனாமி பாதிப்புக்களைக் கவனிப்பதற்காக பொத்துவில் தொட்டு பெரியநீலாவணை வரையான பகுதிகளிலுள்ள சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதற்காகவே கல்முனை மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஒருவர் மேலதிக அரசாங்க அதிபராக அங்கு நியமிக்கப்பட்டார். கல்முனையில் இந்தப் பணிமனை இயங்கியது. தற்போது இந்த மேலதிக கச்சேரி அம்பாறைக் கச்சேரியுடன் மீண்டும் இணைக்கப்பட்டு விட்டது. அதனால் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய அவர் கிழக்கு மாகாண சபைக்குள் சென்று விட்டார்.

அதிகாரமில்லாத மேலதிக அரச அதிபர்

மேலதிக அரசாங்க அதிபர் பதவி என்பது ஒரு பிரதேச செயலாளருக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இல்லாத பதவியாகும். ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தில் இருக்குமானால் அம்பாறை மாவட்ட கரையோரக் கச்சேரியை விடயத்தை விட இந்த அரசாங்கத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசும் ஒருவரைப பெற்று ஜெயித்துக் காட்ட வேண்டும்.

இந்த டிமாண்டை கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பின்போது இவர்கள் மஹிந்த அரசாங்கத்திற்கு முன்வைத்துச் சாதித்துக் காட்டியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, அப்படியான சவால்களுக்கு முகங்கொடுக்காமல் தகுந்த தருணங்களில் அவ்வாறான முக்கிய விடயங்களை மறந்து விட்டு அல்லது மௌனம் காத்து விட்டு, தேர்தல்கள் வருகின்ற காலங்களில் மட்டும் எமது மக்களை ஏமாற்றும் இப்படியான மாயாஜாலங்கள் காட்டுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த எட்ட முடியாத, எந்தக் காலத்திலும் அடையப்பெற இயலாத 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' எனும் இக்கோரிக்கை முன்வைப்பின் உள்நோக்கம் என்னவெனில், மு.கா இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் 3 எம்பிக்களைப் பெற்றுக்கொண்டு தேர்தலின் பின்னர் இம்மாவட்ட முஸ்லிம்களைக் கைவிட்டு விட்டு வழமைபோல் ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் பேரினவாதக் கட்சிகளுடன் தங்களது அமைச்சுப் பதவிகளுக்கும், அரச சலுகைகளுக்குமாகப் பேரம் பேசுவதற்காக மாத்திரமே என்பதையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்பது அதாவுல்லாவைத் தோற்கடிக்கும் திட்டம்

மு.கா.சின் 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்பது, கிழக்கில் தனியான முஸ்லிம் இராஜ்ஜியம் என்ற ஒன்றை அமைத்து மூன்று எம்.பி.க்களை அடைவது. அதாவது பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மூன்று எம்.பி.க்களைப் பெறுவதாகும்.

அதனால் மு.கா.சினர் தவிர்ந்த வேறு எவரும் இந்த 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' எனும் ஆகாயப்பந்தலில் வெற்றியடைய முடியாத நிலையை உருவாக்குதல். குறிப்பாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவைத் தோற்கடிக்க வைப்பதற்காக இவர்கள் கையில் எடுத்துள்ள ஒரு திட்டம்தான் 'மு.கா.சின் முஸ்லிம் கரையோர மாவட்டக்' கோரிக்கையாகும். மு.கா.சினர், தமது அம்பாறை மாவட்ட அரசியல் இருப்புக்கு ஒரு பெருத்த இடையூறாகப் பார்ப்பது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையாகும். அதனால் அதாவுல்லாவை எப்படியாவது மீண்டும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் மு.கா. இந்தக் கோரிக்கையை சமயம் பார்த்துக் கையில் எடுத்துக் காய்நகர்த்தி வருகின்றது.

தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளி விடுவதா?
தமிழ் மக்களின் போராட்டங்களிலும், குருதியிலும் கிடைக்கப்பெற்ற சுகபோகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டும், 'நோகாமல் நுங்கு சாப்பிட்டுக் கொண்டும்' அம்பாரையில் முஸ்லிம் இராஜ்ஜியம் அமைத்தால், அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளிவிடுவதா?

ஏற்கனவே அம்பாரையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தமிழ் மக்களையும் தமிழ் அரசியலையும் ஒரங்கட்டி ஒதுக்கி வருகின்ற மு.கா.சினர், அவர்களது எதிர்பார்ப்பின்படி 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்பதை அம்பாறை மாவட்டத்தில் அமைத்தால், அம்மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் கதி அதோ கதிதான். இதற்காகவே, அம்பாரையில் மு.கா 3 எம்பிக்களைப் பெறும் வகையில் 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்ற பூதத்தை இம்முறை அங்கே கிளப்பிட்டாங்கய்யா!

ஓவ்வொரு தேர்தலின் பின்னரும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையே அப்பட்டமாக ஏலம் போட்டு விற்று வருகின்ற இந்த மொத்த அரசியல் வியாபாரிகள், முஸ்லிம் மாவட்டத்திற்குள் சிறுபான்மையினமாக தமிழ் மக்களை மாற்றிவிட்டு, தமிழ் மக்களையும் இனி ஏலம் போட்டு விற்று விடத் துணிவார்கள் எனபதில் ஐயமில்லை.

ஹக்கீம், ஹசனலி வகையறாக்களின் தலைகளுக்குள் இருந்து மாத்திரமே பிறக்கக்கூடிய இந்த முஸ்லிம் கரையோர மாவட்டத்திற்கு, அம்பாறை மாவட்டத்தில் வாழக்கூடிய தமிழ் மக்களின் சார்பாகவோ அல்லது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவோ அல்லது வேறு எந்தவொரு புத்திஜீவிகள், கல்விமான்கள் தரப்புக்களுமோ எந்தவிதமான ஆதரவும் அளிக்காது. இந்தப் புரளியை மக்கள் நம்பாதீர்கள். இது, எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட நிலைதான்.

இந்த 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்ற கோரிக்கையை மு.கா.சினர் மாத்திரமல்ல, வேறு யார்தான் முன்வைத்தாலும் அதனை அம்மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஆசீர்வாத்துடனும், அனுசரணையோடும்தான் பெறலாமேயொழிய, சும்மா புதுப்புது வித்தைகளை முஸ்லிம் மக்களின் வாக்குக் கொள்ளைக்காக வழமைப்பிரகாரம் எடுத்து விடக்கூடாது. கனவிலும் நடக்காத விடயம் இது. மக்களே மீண்டும் நாம் வலியுறுத்துகின்றோம், இந்தக் கற்பனைப் புரளியை நீங்கள் கடுகளவுக்கல்ல, கடுகின் முனையளவுக்கேனும் நம்பாதீர்கள்.

பொதுத் விடப்பட்ட புரளி


மு.கா.சின் இந்த 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' எந்தவொரு யுகத்திலும் இந்த நாட்டில் நடக்கப் போகின்ற விடயமல்ல. அதே போன்று கிழக்கு நிர்வாகம் என்பதும் நடக்கும் விடயமல்ல. ஆனாலும் எதிர்வருகின்ற தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்தப் புரளியை மு.கா.சினர் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் மூலைமுடுக்கெங்கும் மாரித் தவளைகளாகப் பிரச்சாரப்படுத்துவார்கள். தற்போது மு.கா. அம்பாரையில் களையிழந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஏதாவது ஒரு புரளியை 'முஸ்லிம் சமூகத்திற்கான விட்டமின் டானிக்'காக எடுத்து விட வேண்டிய அவசர, அவசியத் தேவை மு.கா.வுக்கு உள்ளது.

அதனால்தான் இப்போது இந்த 'முஸ்லிம் கரையோர மாவட்டம்' என்ற வித்தையைக் கிளப்பி விட்டுள்ளார்கள். இந்த வித்தையினால் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது. அதனால் இந்த வித்தையை தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். என்ன இழிவேசம் இது? என்ன மோசமான கோசம் இது?

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் 'காகம் வெள்ளை' என்றவாறான இந்த அபாண்டத்தையும் சில அறிவிலிகள் நம்புவார்கள். இந்த வகையறாக்கள் வரும்போது 'நாரே தக்பீர்' என்பார்கள்.'அழ்ழாஹு அக்பர்' என்று கோஷம் எழுப்பி வாக்குகளை அளிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் 'முஸ்லிம் கரையோர மாவட்;டம்' மிச்சம் இலேசாக இவர்களுக்குக் கிடைத்து விடும்.

காற்றில் பறப்போம், மின்னலைப் பிடிப்போம், கடலில் நடப்போம், மின்சாரத்தையே சம்சாரமாக்குவோம் என்பார்கள் இவர்கள். அதையும் நம்மவர்கள் தலைக்கும் மூளைக்கும் வேலையே கொடுக்காமல் காதாலும், கண்ணாலும் கேட்டும், கண்டும் நம்புவார்கள்.

இந்த வகையறாக்கள் தேர்தல் காலத்தில் மாத்திரம்தானே இப்படியான புதுப்புதுச் சரக்குகளோடு மக்களைத் தேடி வருகிறார்கள்? ஆனால் இது எதுவும் நடக்காது. இதனால் இந்த அரசியல் மொத்த வியாபாரிகளின் பொக்கட்டுக்களை மாத்திரம் நிரம்பும். அவர்கள் குடும்பம் செழிக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -