எஸ்.அஷ்ரப்கான்-
அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைரின் முயற்சியினால் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின்அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வுபணிப்பாளர் கே.எல்.சுபைரின் தலைமையில் கல்முனை அல்தாப் ஹோட்டலில் (ஏ.எப்.சி) நடைபெற்றது.
சாய்ந்தமருது, சம்மாந்துறை வை.எம்.எம்.ஏ. கிளைகளின் அனுசரணையும் வழிநடாத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்விற்குபிரதம அதிதியாக பேரவையின் வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியத்தலைவர் தேசபந்து எம்.என்.எம். நபீல் அவர்களும் கௌரவ அதிதியாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட்எம். றிஸ்மியும், விசேட அதிதிகளாக பேரவையின் போதைப்பொருள் தடுப்பு திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர், பேரவையின் தலைமைத்துவமும் பயிற்சியும் மற்றும் இளைஞர் வலுவட்டலுக்குமான திட்ட தவிசாளர், பிரபல சமூகசேவையாளர் யூ.எம். பாஸீல் ஆகியோரும் கிளை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிழ்வின்போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஊடாக மக்களுக்குசெய்யப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் கிளை வை.எம்.எம்.ஏ களின் செயற்திட்டங்கள்,சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதுள்ள தேசிய பிரச்சினையான கல்விக் கல்லுாரிகளுக்கான நியமனங்களின்போது கிழக்கு மாகாணடிப்ளோமாதாரிகள் பலரை (ஆண், பெண் இரு பாலாரையும்) வெளி மாவட்டங்களுக்கு நியமித்தமை தொடர்பில்பேரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர்களின்கவனத்திற்கு கொண்டு வருவதாக பேரைவையின் தலைவர் செயலாளர்கள் உறுதியளித்தனர். அது மாத்திரமல்லாமல்இது விடயத்தில் பாதிக்கப்பட்டோர் உடனடியாக பேரவையின் acymmac@gmail.com மின்னஞ்சல் முகவரியுடனும், செயலாளரின் 0777391691 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறுவேண்டப்படுகின்றனர்.
அதுபோல் பிரிதொரு பிரச்சினையான மௌலவி ஆசிரியர் பிரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதில் கிழக்குமாகாண மௌலவிமார் முற்றாக புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களும்உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தேசிய பேரவையின் சார்பில் தேசியத் தலைவர் எம்.என்.எம். நபீல், பொதுச் செயலாளர் ஷஹீட் எம்.றிஸ்மி மற்றும் பேரவையின் போதைப்பொருள் தடுப்பு திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர், அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைர்ஆகியோர் கிளை அங்கத்தவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் விசேடமாக கல்முனை கிளைத் தலைவர் மௌலவி எச்.எம். ஹாறூன் அவர்களின் புதல்வன் முஹம்மத் அன்சித்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.