கட்டாரிலிருந்து வந்து நாட்டு முஸ்லீம்களுக்கு பெரும் பரிசளித்த ஜனாதிபதி மைத்திரி

ட்டாரிலிருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி பரிசளித்துள்ளதாக முஸ்லிம்முற்போக்கு முன்னணியின் ஊடக செயலாளர் அஸாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கட்டார் நாட்டில் இருந்து நேற்று இலங்கைக்கு மீளதிரும்பியிருந்தார்.இன்று அவரது ஊடக பிரிவானது கால்நடைகளை வாகனங்களில்ஏற்றிச் செல்லும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளது. ஜனாதிபதிமைத்திரிப்பால சிறி சேனா ஜனாதிபதியாவதற்கு முன்பே மாடுகளை பொலனறுவையில்இருந்து ஏற்றிச் செல்வதை தடுத்த கதைகளும் பரவலாகவே உள்ளன.அன்றேதடுத்தவருக்கு இன்று தடுப்பதொன்றும் பெரிய விடயமல்ல.

அதிகமாக முஸ்லிம்களே மாடுகளை அறுத்துண்பதை வழக்கமாக கொண்டுள்ளதால்இவ்விடயமானது முஸ்லிம்களையே அதிகம் பாதிக்கும் என்பதில் எதுவிதசந்தேகமுமில்லை. மாடு அறுத்துண்டுதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்றில்லை.இருந்தாலும் முஸ்லிம்களை குறி வைத்து நடக்கும் விடயங்களை ஒரு போதும்ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை பராமுகமாக இருக்கும் போது இனவாதிகளுக்கு அதுஉற்சாகமளிப்பதாக அமைந்துவிடும்.

முஸ்லிம்களின் மத கடமைகளான அகீகா, உழ்கிய்யா போன்ற விடயங்களின் போதுமாடு அறுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் உள்ள அதிகமான இடங்களுக்குஅம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை போன்ற இடங்களில் இருந்தே மாடுகள்அறுவைக்காக வருகின்றன. இச் சட்டம் அமுலில் வருகின்ற போது இலங்கையில் உள்ளஅதிகமான பிரதேசங்களில் மாடு அறுப்பது குறைவடையும். இச் சட்டம் மறுவடிவமானது,ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மாடு அறுப்பை தடை செய்துள்ளார் என்பதாகும். இச்சட்டம் முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கும்.

கட்டார் நாட்டில் இருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்விடயத்தை ஜனாதிபதிமைத்திரிப்பால சிறி சேனா செய்திருப்பதானது, முஸ்லிம் நாடான கட்டார் நாட்டைநோக்கி அவர் சென்ற நோக்கம் நிறைவேறாததால் முஸ்லிம்களை பழிவாங்கும்நோக்குடனும் இருக்கலாம். உடனடியாக இச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா வாபஸ் பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -