மேற்கு வங்கம் மாநில பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வைத்திய பரிசோதனையில் பெண் குழந்தை என்று தெரிய வந்தமையால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கர்ப்பிணிப் பெண் சில தினங்களுக்கு முன்பு வைத்திய பரிசோதனைக்கு சென்ற போது அவரது வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது உறுதியா கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அந்தப்பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் சகோதரியால் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் தாக்கப்பட்டபோது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கர்ப்பிணிப்பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கர்ப்பகாலத்தில் என்ன குழந்தை வயிற்றில் இருக்கிறது என்பதை அறிய இந்திய அரசு தடைவிதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (இணையம்)