எம்.ரீ. ஹைதர் அலி-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சகோதரர் ஒருவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பல் நிற அச்சு இயந்திரம் (Colour Printor) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதனை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அச்சகோதரரின் வியாபார ஸ்தலத்திற்கு 2017.10.23ஆந்திகதி - திங்கட்கிழமை நேரடியாகச் சென்று கையளித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் இச்சகோதரர் முன்வைத்த கோரிக்கை்கமைவாக இதனை பெற்றுக்கொடுத்தார்
சுயதொழில் மேற்கொள்ளும் நபர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துமுகமாக தன்னாலான பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளையும், வேலைத்திட்டங்களையும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
”அல்லாஹ் அவருடைய வியாபாரத்தில் பறக்கத் செய்வானாக”