படம் காட்டும் அரசியல் கலாச்சாரம் மலையகத்தில் இனியும் எடுபடாது அப்கொட்டில் திலகர் எம்.பி




ராமச்சந்திரன் -

லர் கலராக வாகனப் பேரணியில் வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் பழகிய மலையக கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று மக்களக்கு சேவை செய்வதற்காக மலையகமெங்கும் நாங்கள் இடைவிடாது பயணங்களை மேற்கொள்கின்றோம். இது கடந்த பொது தேர்தலில் மக்கள் எமக்கு கொடுத்து அபரிமிதமான அங்கிகாரத்துக்கு நாங்கள் செய்யும் கடமை.என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்

அப்கெட் கவரவில பகுதியில் இயற்கை அணர்த்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு 08.10.2017 புதிய தனிவீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பேதே இவ்வாறு தெரிவித்தார்

மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன். சிங் பொண்ணையா உட்பட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்

வெறுமனே தேர்தல் காலங்களில் மட்டும் வர்ண வாகண பேரணி காட்டி மக்களை முட்டாள்களாக்கிய காலம் மலையேறிவிட்டது. இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி எனும் குடையின் கீழ் பாரபட்சமற்ற மக்கள் பணிகள் மலையகமெங்கும் பறந்துபட்டளவில் நடைபெறுகின்றது.

தொடர்ந்தும் இது போன்ற பணிகள் எமது மக்களுக்கு கிடைக்கவேண்டுமாயின் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளில் எமது வட்டரத்தில் எம்முடைய ஒருவரை தெரிவு செய்வதன் மூலம் எமது தேவைகளை இலகுவாக்கி கொள்வதோடு மட்டுமன்றி விரைவான சேவைகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாயிருக்கும். கடந்த பல வருடங்களாக வீடு கட்டுவதற்கு உகந்த இடமாக காணப்பட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்ட இந்த இடம் அரசியல் சுயலாபத்துக்காக மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தேறிய சம்பவங்களை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்காயிரம் வீடுகளில் குறிப்பிட்ட அளவு வீடுகளை இந்த இடத்தில் கட்டியிருந்தால் இன்று மக்கள் குடியேறி ஆண்டுகள் கடந்திருக்கும்.

இன்று நாங்கள் வரும் பாதைகளில் ஆங்காங்கே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தோடு தங்களின் படங்களையும் வைத்து காட்சிபடுத்தியிந்தார்கள். இந்த படம் காட்டும் அரசியல் எல்லாம் காலம் கடந்து போய்விட்டது. இனியும் படம் காட்டும் அரசியல் மக்களிடத்தில் செல்லாது என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -