புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" நடத்தும், "கௌரவிப்பு விழா"

புங்குடுதீவு தாயகம், சொக்கலிங்கம் அக்கெடமியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை, மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்துவதுடன், மாற்றுத் திறனாளிகள் சிலரும் "தாயகம் சமூக சேவை அகத்தினால்" கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள்.

மேற்படி விழாவில் புங்குடுதீவு முன்பள்ளி மாணவ, மாணவிகள், & ஆசிரியர்களும், "அமரர் கந்தையா தனபாலன்" ஞாபகார்த்தமாக, அவரது குடும்பத்தினரால் கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள்.

இதேபோல் புலமைப் பரிசில் பரீடசையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவி செல்வி. விஜயகுமாரசர்மா ஐஸ்வர்யா அவர்களுக்கு, "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், "பணமுடிப்பு" வழங்கிக் கௌரவப்படுத்தல்..

அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

இடம்..: அம்பலவாணர் கலையரங்கம், புங்குடுதீவு.

காலம்..: 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணிக்கு...

"அனைவரும் வருக.. ஆதரவு தருக"..

இவ்வண்ணம்...
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
"தாயகம் சமூக சேவை அகம்" புங்குடுதீவு.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -