மலையகத் தமிழ் மக்களின் நலனுக்காக அமைச்சரவையில் வினைத்திறனுடன் செயற்படும் தமிழ் முற்போக்குக் கூட்டணி

நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

லையகத் தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடியவகையில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டங்களை தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் பயன்படுத்தி வருகின்றமை வரலாற்று திருப்பு முனையாகுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அட்டன் டி .கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான கூட்டத்தில்( 24 )கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

1977 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைகளில் தமிழ் அமைச்சர்கள் இடம் பெற்று வந்துள்ளனர்;. ஆனால் இந்த அமைச்சரவைகளில் மலையகத் தமிழ் மக்களின் காணியுரிமை , வீட்டுரிமை உட்பட பல உரிமைகள் குறித்து தமிழ் அமைச்சர்கள் வினைத்திறனுடன் செயற்படவில்லை. ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களான திகாம்பரம் , மனோகணேசன் ஆகியோர் மலையகத் தமிழ் மக்களின் சார்பாக அமைச்சரவையில் பல பத்திரங்களைச் சமர்ப்பித்து ஆக்கப்பூர்வமான தீர்மானங்களைப் பெற்றுத்தருகின்றனர்.

அந்த வகையில் தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கு வரலாற்றில் முதற்தடவையாக காணியுரிமைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதே போல நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. இவ்வாறு எமது மக்கள் சார்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகள் நிறைவேற்றப்படுகின்றமை மலையக அரசியலில் ஒரு திருப்பு முனையாகும்.
எனவே 200 வருடகால வரலாறைக் கொண்ட மலையகத் தமிழ் சமூகத்துக்குத் தற்போதுதான் தூய காணியுரிமை கிடைக்கப்போகின்றது. இதற்கேற்ப முதற்கட்டமாக 6800 குடும்பங்களுக்குக் காணியுறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென்பது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களின் அர்ப்பணிப்பாகும்.

ஆகவே எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் கரத்தினால் அட்டனில் காணியுறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் சகலரும் கலந்து கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -