பழைய கட்டிடமொன்று உடைந்து விழும் நிலையில் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம்



அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் பழைய கட்டிடமொன்று உடைந்து விழுமளவுக்கு காணப்படுவதாகவும் அக்கட்டிடத்திற்குள் இரண்டு வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதாகவும் பெற்றோர்களும் மாணவர்களும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

1954ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பழைய கட்டிடத்திற்குள் இடப்பற்றாக்குறை காரணமாக 09ம் மற்றும் 10ம் தர வகுப்புக்கள நடாத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை
அதே கட்டிடத்திற்குள் ஆசிரியர் விடுதியும் காணப்படுகின்ற போதிலும் ஆசிரியர்கள் பயத்திற்காக ஆசிரியர் விடுதியை
பயன்படுத்துவதில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

இக்கட்டிடத்தின் கூரை உக்கிய நிலையில் காணப்படுவதுடன் ஓடுகள் உடைந்தும் ஜன்னல்கள் உடைந்தும் காணப்படுகின்றது.

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்ற போதிலும் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம் பழைமை வாய்ந்த பாடசாலையாகும் !

இப்பாடசாலையில் 260 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் 22 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 12 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

விவசாயத்தையும் -மீன்பிடி மற்றும் தேன் எடுத்தல் போன்ற தொழில்களை பிரதான தொழில்களாக செய்து வரும் தங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் திணைக்கள அதிகாரிகளும் அக்கறையின்றி செயற்படுவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் உடைந்து விழுமளவுக்கு காணப்படுகின்ற இக்கட்டிடத்தை நிர்மானிக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -