பொத்துவில் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்னாள் அமைச்சர் நஸீர் நடவடிக்கை





சப்னி அஹமட்-

பொத்துவில் பிரதேசத்தின் கல்வியில் நாம் புறக்கணிப்பு இல்லாத முறையில் சிறந்த கல்வி முன்னேற்றத்தை பொத்துவில் பிரதேசத்தில் உருவாக்க வேண்டும் என்பதில் நான் முன்னின்று உழைக்க தயார் எனவும் பொத்துவில் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு ஆசிரியர்களை நியமித்து உரிய ஆசிரியர்களை இடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 06 பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (28) அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் தலமையில் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் அமைச்சரிடம் அட்டாளைச்சேனை, பொத்துவில் உள்ள சில முக்கிய பாடாசலைகளின் கோரிக்கைக்கு அமைவாக இவ் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 850,000/- ற்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமே இவ் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டது. இதில் அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயம் , ரீ.பி. ஜாயா வித்தியாலயம், ஜலால்தீன் வித்தியாலயம் போன்றவற்றுடன் பொத்துவில் அல்-ஹுதா வித்தியாயம், அல்-ஹிதாயா வித்தியாலயம் போன்ற பாடாசலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 750,000/- ரூபா நிதியில் புதிதாக முன்னாள் அமைச்சர் நஸீர் அவர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியினை கையளிக்கும் நிகழ்வும், அதிபர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடந்தும் கருத்து தெரிவிக்கையில்;

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு நாம் ஆளுநர் அவர்களிடம் கோரியமைக்கு அமைவாக உடனடியாக ஆசிரியர்களை அங்கு நியமிக்கும் படி வேண்டிக்கொண்டதுடன் அது தொடர்பிலான நடவடிக்கைகளையும் அங்கு உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பில் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஆளுநரிடம் நேரடி பேச்சினை மேற்கொண்டுள்ளோம் மிக விரைவில் பொத்துவில் பிரதேசத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, குறிப்பாக பொத்துவிலில் இருந்து இடமாற்றம் செய்து அனுப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்றீடு ஆசிரியர்கள் வழங்க வேண்டியது வலயக்கல்வி அலுவலகத்தின் பொறுப்பு எனவும், இதற்கான நடவடிக்கைகளை நான் ஆளுநர் மற்றும் பல கல்விஅமைச்சின் உயர் அதிகாரிகளிடன் பேசியுள்ளேன் அதற்கான் தீர்வு மிகவிரைவில் கிட்டும் என அங்கு முன்னாள் அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -