முஸ்லிம் மக்களின் நியாயமான சமூக உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும், அனைத்து நாட்டு மக்களின்நலனில் அக்கறை கொண்ட விடயங்களில் தமது குரலை இணைத்துக் கொள்ளவும், சர்வதேச ரீதியிலானபங்களிப்பினை ஆற்றுவதையும் தமது இலக்காக வரையறுத்து செயற்படவுள்ளதாக ஐக்கியத்திற்கான சுயாதீன மக்கள் அமைப்பு (Independent Civil Society For Unity) விடுத்துள்ள முதலாவது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் மக்களிடையே, அண்மைக்காலமாக இலங்கையில் நிகழ்ந்துவரும்அரசியல், சமூக மாற்றங்கள், செயற்பாடுகள், புறமொதுக்கல்கள் தொடர்பாக அதிக கவனக்குவிப்பும் அக்கறையும்ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதன் வெளிப்பாடாகவே இவ்வமைப்பு அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை வாழ் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகட்டும் , முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியாகமேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களாகட்டும் இவை ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் பாதிக்கும்அம்சங்களாக இன்று மாறி விட்டிருக்கிறது.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என சொல்லிக் கொள்ளும் பாரளுமன்ற கட்சி அரசியல்வாதிகள் யாருமே நாட்டின்வளர்ச்சிக்கோ, முஸ்லிம் மக்களின் அரசியல், சமூகப் பாதுகாப்புக்கோ பங்களிப்பு செய்ய முடியாத தோல்விநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன், சொந்த மக்களையும் விற்றுப் பிழைக்கும் கடை நிலையை எட்டி இருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளிடம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிகழ்காலத்தினையும் எதிர்காலத்தினையும் இனியும்ஒப்படைக்க முடியாது என்கிற சிந்தனை வெளிப்பாடு சமூக மட்டங்களில் அழுத்தமாக பதிந்து வருகிறது.
இந்த உண்மையின் வெளிப்பாடாகவே, இலங்கையை தாயகமாகக் கொண்ட வெளிநாட்டில் வாழும் சமூகசக்திகளிடம், இனியும் மௌனமாக இருக்க முடியாது, தம்மால் முடிந்த சிறு பங்களிப்பினையாவது சொந்தமக்களுக்கு செய்ய வேண்டுமென்ற உணர்வை விதைத்துள்ளது. கட்சி சார்பில்லாது , எந்த முஸ்லிம் அரசியல்தலைமைகளையும் வழிபாடாகக் கொள்ளாது, சுயாதீனமாக , இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினைபலப்படுத்துவதுடன், அனைத்து இன மக்களுடனும் ஐக்கியமாக வாழும் நோக்கினை முன்னிலைப்படுத்திஇயங்குவதை ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் 01ம் திகதி பிரித்தானியாவில் “ஐக்கியத்திற்கான சுயாதீன மக்கள் அமைப்பு“ (Independent Civil Society For Unity) என்கிற சுயாதீனமான மக்கள்சார் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குமாகணத்தினை சேர்ந்த சமூக ஈடுபாட்டாளர்களை அங்கத்துவமாகக் கொண்ட இந்த அமைப்பு, இலங்கை வாழ்முஸ்லிம் மக்களின் நியாயமான சமூக உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும், அனைத்து நாட்டு மக்களின்நலனில் அக்கறை கொண்ட விடயங்களில் தமது குரலை இணைத்துக் கொள்ளவும் , சர்வதேச ரீதியிலானபங்களிப்பினை ஆற்றுவதையும் தமது இலக்காக வரையறுத்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்வமைப்பின்வேலைத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு இலங்கை மக்களுக்குள்ளும், சர்வதேச மட்டத்திலும்முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே இதற்கான இதயபூர்வமான ஒத்துழைப்புக்கள் மற்றும் காத்திரமான பங்களிப்புக்களை கிழக்குவாழ் மக்கள் வழங்கி எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு அடித்தளத்தினை இட்டுச் செல்ல அணைவரும் கைகோர்க்குமாறு இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.