ஸபா ரௌஸ் கரீம்-
சாய்ந்தமருது மக்களின் தாகத்தை தீர்க்க கல்முனை மக்களோ அரசியல் வாதிகளோ என்றும் தடையில்லை கல்முனை எல்லைகள் சரியான முறையில் பிரிக்கப்படவேண்டும் அதாவது நான்காக பிரிக்கப்படல் வேண்டும்
கல்முனை மக்களுடைய விருப்பம் எம்மை தமிழர்கள் தலைமை தாங்க கூடாது என்பதுதான் எம் மாநகரத்தின் முதல்வர் ஒரு கலிமா சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நப்பாசை தவிர பதவி மோகமல்ல
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கல்முனையை 4 ஆக பிரிப்பதாக சொன்னார் அதை நாங்கள் அந்த நேரம் ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் எமக்கான எல்லைகளை சரியாக பிரிக்கவில்லை எதிர்த்தோம்
கல்முனை மக்கள் இன்று கேட்பது சரியான எல்லையைத்தான் தவிர அடுத்தவர்களின் உரிமைகளை அல்ல
என்றும் சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை பக்க பலமாக இருப்போம் தவிர பிரதியமைச்சர் ஹரீஸோ ,மக்களோ தடையாக இருக்க போவதில்லை
பிரதியமைச்சர் ஹரீஸ் அல்ல எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் இதைத்தான் கூறுவார் ஒரு ஊருக்கும் பாதிப்பில்லாதவாறு தீர்வுகளை எடுப்பார்கள் அதை தடுப்பது என சில கட்சிகள்,ஆதரவாளர்கள் கூறுவது
சுயநலம் தவிர பொதுநலமல்ல
நகமும் சதையும் போல உள்ள ஊர்களை ஒரு சில நயவஞ்சகர்கள் தாங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்து கொள்ளவேண்டும் வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் தாங்களும் கட்சிகளும் வெல்ல வேண்டும் ஒரு சிலர் அமைப்புக்கள் பிரபல்யம் அடைய வேண்டும் என்ற நோக்கில் ஊரை மூட்டிவிட்டு தன் இலக்குகளை அடைய நினைக்கின்றனர் எலி அறுக்கும் தூக்காது நாளை இரு ஊர்களையும் குழப்பிவிட்டு சென்றுவிடுவார்கள் இந்த குள்ள நரிகள் பாதிக்கப்படுவது இரு ஊர்மக்கள்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
சமூகம் சமூகம் என கூறும் பதவி மோகம் பிடித்தவர்களை சுயட்சை குழுவில் எதிர்வரும் தேர்தலில் காணலாம் எங்களுக்கு தேர்தலில் குதிக்க விருப்பமே இல்லை மக்கள் அழைக்கின்றனர் சமூகத்துக்காக இறங்கவுள்ளோம்
கட்சி வேண்டாம் பள்ளிவாயல் மூலமாக சுயட்சையில் இறங்கவுள்ளோம் என கயவர்கள் அறிவிப்பார்கள் இந்த விசயத்தில் இரு ஊரை குழப்ப நினைப்பவர்கள் நிச்சயம் மக்களிடத்தில் வருவார்கள்
கயவர்களே! ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ஊரை மூட்டிவிட்டு எம் இளைஞ்சர்களை பிரதேசவாத கருத்துக்களை முகநூலில் பதிய தூண்டிவிடுவது ஒரு இழிவான செயல் நாளை உயிரை கூட இழக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம் அந்த நேரம் ஒரு ஏழை குடும்பம் நடுவீதிக்கு வந்து அனாதையாக்கபடலாம் அவ்வாறு நடந்தால் இரு ஊரை குழப்பும் கயவர்கள் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும்
வேற விடயத்தில் சாதித்து காட்டி மக்கள் மனதில் இடம்பிடியுங்கள் இரு ஊரையும் பிரச்சினைக்குள்ளாக்கி தாங்கள் ஏதோ சமூக நலன் விரும்பிகள் போல படம் பிடித்து காட்டும் அரசியல் நப்பாசை உள்ளவர்கள் தவிர்ந்துகொள்ளுங்கள்
எந்த சகோதரனின் உயிர் போனாலும் பரவாயில்லை இரு ஊரை குழப்பி ஆயிரம் இளைஞ்சர்களின் உயிர் போனாலும் பரவாயில்லை எம் இலக்கை அடையவேண்டும் நினைக்கும் கயவர்கள் முகங்கள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் வெளிவரும் இதை சொல்லி சொல்லி வாக்கை கேட்பார்கள்
அல்லாஹ்வுக்காக முகநூலில் பிரதேசவாத கருத்துக்களை பதிவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் இரு ஊர்களிலும் ஏதோ ஒரு வழியில் எமது சொந்த பந்தங்கள் இருக்கின்றன மக்களின் உணர்வில் விளையாடுவதை நிறுத்தி ,மனகசப்புக்களை தூக்கி வீசிவிட்டு இப் பிரச்சினை சுமுகமாக தீர நோன்பு நோற்று அல்லாஹ்விடத்தில் பிராத்தித்து நகமும் சதையும் போல வாழ்வோம்