தெ.கி. ப. பிரயோக விஞ்ஞான பீடத்தில் இந்துக்களுக்கான கோவில்!

எம்.வை.அமீர் -

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இந்து மாணவர்கள் ,விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சமய கிரிகைகளை நடாத்துவதற்க்காக இந்துக் கோவில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2017-10-23 ஆம் திகதி வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ குஞ்சுத் தம்பி நிமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

அடிக்கல் நடும் நிகழ்வில் கணிதவியல் விஞ்ஞானத்துறை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கோமதிராஜ், விரிவுரையாளர் தசாஜினி நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இந்து அமைப்பின் பிரதிநிதிகளும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் இந்து மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் என சுமார் 90 பேர் உள்ளதும், இவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடனுமே குறித்த கோவிலை நிர்மாணிப்பதும், ஏற்கனவே பௌத்தர்களுக்கான வணக்கஸ்த்தலம் ஒன்றும் இங்கு நிர்மானிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -