ஆஷிக்-
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஒலுவில் கிராமத்தில் இருக்கும் இரு வட்டாரங்களை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கைப்பற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்பதனை மக்கள் இன்று உறுதி செய்துள்ளனர். என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய காங்கிரசின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்தார்.
இன்று தேசிய காங்கிரசை நோக்கி மக்கள் கடல் அலைபோல் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதன் ஒரு சான்றுத்கான் இன்று ஒலுவில் கிராமத்தின் தலை சிறந்தவர்கள் அதிக குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஒலுவிலில் வாழவைத்தவர்கள் இன்று அதாவுள்ளா அணியில் சேர்ந்துள்ளமை இதர்கு சிறந்த சான்றாகும். எனவே இங்கு இருக்கு இரண்டும் வட்டாரங்களையும் அதி கூடிய வாக்குகளால் தேசிய காங்கிரஸ் வெற்றி பெறும் என்னும் உண்மைய மக்கள் புரிந்து கொண்டு மீதம் உள்ள அனைவரும் தேசிய காங்கிரசில் இணைந்து சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.