ஆளுமையுள்ள ஒரு அரசியல்வாதியை கிழக்கு முதல்வரின் மூலம் கண்டு கொண்டேன் -கிண்ணியா மஹ்சூம்


டந்த 2012 ல் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக பதவி ஏற்றது முதல் 2015 முதலமைச்சராகவும் பதவி வகுத்த 05 வருட காலம் அவருடன் ஊடக இணைப்பாளராக கடமை புரிந்து வந்ததினை நினைக்கும் போது மிக பெருமையாக உள்ளது அந்த வகையில் முதல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாகா எமது கிழக்கு முதல்வருக்கும் எப்போதும் கடமைப்பட்டவனாக இருப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

யார் எது சொன்னாலும் சரி நான் எனது வயதுக்கு கண்ட அரசியல் வாதிகளில் இவரைப்போன்று ஒரு மா மனிதரை கன்டிருக்கவே முடியாது எத்தனை பேர் இன்று அவரை பற்றி பலவிதமான கருத்துக்களை சொன்னாலும் எது உண்மை ,எது பொய் என்ன செய்து இருக்கார் என்பது அத்தனை விடயமும் நான் அறிந்தவன் அல்லாஹ் போதுமானவன் ..

பிரதேசவாதம், இனவாதம், ஏழை, பணக்காரன் தாழ்ந்தவன், உயர்ந்தவன் ,கட்சிக்காரன் மாற்று கட்சிக்காரன்,நண்பன் எதிரி இவை அனைத்தையும் தாண்டி ஒரு சிறந்த பண்புள்ள சமூக சிந்தனை உடைய ஒரு இளம் வாலிபனை போன்று துடிப்பு மிக்க ஆளுமை அதிகாரம் மிக்க ஒரு முதல்வனை இம்மாகாணாம் இழந்து உள்ளது என்பதினை நினைக்கும் போது கண்கள் மட்டும் அல்ல உள்ளம் பதறுகின்றது.

முதல்வரின் சேவைகளை பார்க்கும் போது என்னை அறியாமல் எனக்குள் பொறாமை வரும் இந்த மனிதர் என் மண்ணில் பிறந்து இருக்க கூடாதா என்று என் மனது துடிக்கும் . இருப்பினும் எல்லோரையும் பாகு பாடுன்றி பார்த்தார் '' வாய்க்கால் வழியாக ஓடும் நீர் புல்லுக்கும் ஆங்கே கசியுமாம்" ' என்பது போன்று எல்லா மதத்தினரும் நண்மை பெற்றிக்குகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் .

பெருமமைக்காக அவரை புகழணும் என்று இப்பதிவை போடவில்லை என்மனதில் உத்தித்ததை பதிவு செய்துள்ளேன் யாருடைய உள்ளங்களையும் காயப்படுத்தவோ கருத்து முரண் பாடுகளை கேட்கவோ போடவில்லை எல்லோரும் பொருந்தி கொள்ளுங்கள் முதல்வரின் ஆயுள் நீடிக்க எல்லோரும் எல்லாவற்றையு ம் மறந்து துவா செய்துகொள்ளுங்கள் அல்லாஹ் என்னையும் உங்களையும் உங்கள்பாவங்களையும் எங்கள் பாவங்களையும் மன்னிப்பானாகா .. ஆமீன் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -