பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் பொது அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கி வைப்பு

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம மட்ட பொது அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக் தலைமையில் இன்று (2) திங்கட்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கணக்காளர் எம்.எம். ஹுசைனா, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராம மட்ட அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -