எம்.எச.;எம். அன்வர்-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான சாதக பாதக நிலை தொடர்பான கலந்துரையாடல் நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் முன்னணியின் தலைவரும் பொறியியலாளருமான எம் ஐ அப்துர்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் திருத்தச்சட்டம் சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தப்போவதனை எவ்வாறு நிவர்த்திப்பது, அதற்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும், அதன் தீர்வுகள் என்ன? என்பது தொடர்பில் அரசியல் சிவில் செயற்பாட்டாளர் திருமதி சுஜாதா கமகே விஷேட விரிவுரையாளராக கலந்துகொண்டு விரிவுரை நடாத்தினார்
இதன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கான சனத்தொகை 88000 ஆக காணப்படவேண்டும் என்ற விதப்புரைக்கேற்ப மாகாண சபை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் மூலோபாயங்கள் எவ்வாறு அமையவேண்டும் எனவும் புத்திஜீவிகளால் இங்கு கருத்துரை வழங்கப்பட்டதுடன் நிலப்பரப்புக்கேற்ப முஸ்லிம்களின் சனத்தொகை தொடர்பிலும் இங்கு கவனம்செலுத்தப்பட்டது
மேற்படி நிகழ்வுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம் நஜாஹ் பிரதித்தவிசாளர் சிராஜ் மஸ்ஹூர் அமைப்பாளர் எம் பி எம் பிர்தௌஸ் நளீமி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் ஏ எம் எம் தௌபீக் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம் ஜ கையூம்(ஷர்கி) நகர சபை செயலாளர் எஸ் எம் ஷபி சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அகமட் லெவ்வை மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.