நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதர்களினால் அட்டன் நகரில் 13.10.2017 காலை முதல் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்
அட்டன் நகரிலுள்ள உணவகங்கள் பேக்கரிகள் பலசரக்கு கடைகள் உட்பட தீபவாளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட நடைபாதை வியாபார கடைத்தொகுதிகளும் சோதணைக்குற்பட்டுத்தப்பட்டது
நகருக்கு வரும் நுகர்வோருக்கு சுத்தமான சுகாதாரமான பொருட்களை வழங்கும் நோக்கிலே சோதணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் குறைபாடுகளுடன் காணப்பட்ட சில வர்த்தக நிலையங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நடைபாதை கடைதொகுதியாளர்களுக்கு பொது இடங்களில் கழிவுகளை கொட்டுதல் உட்பட பல ஆலோசனை நிபந்தனைகளும் வழைங்கப்பட்டதாக அட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் தெரிவித்தார்
மேற்படி சோதணை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.