காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று (22) இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
சுகவீனமுற்றிருந்த நிலையிலும் அவசரமாக இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளமையால் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் காத்தான்குடி முன்னாள் நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம் அஸ்பர் Jp, முன்னாள் நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் றவூப் ஏ மஜீட், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சார்பில் சகோதரர் பஹ்மி, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் தலைமை கிராம சேவக உத்தியோகத்தர் ஜறூப் GS உற்பட கலந்து கொண்டனர்.
இன்று முழு நாளும் கலந்துரையாடி எல்லைகள் உற்பட இது தொடர்பான பல்வேறு விடையங்கள் ஆராயப்பட்டு இதன் முழு தீர்மானம் இன்று எடுக்கப்பட இருக்கிறது.