தேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும் தெளிவூட்டல் செயலமர்வு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் தேர்தல் முறைமை தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், கட்சியின் அரசியல் பிரதிநிதிகள், உயர்பீட உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் புத்துஜீவிகள என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை முழுநாள் செயலமர்வாக இது நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெறுவதுடன், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை மாற்றக் குழுக்களில் அங்கம் வகிப்போரினால் விளக்கமளிக்கப்படவுள்ளது.

முதலாவது அமர்வில், புதிய தேர்தல் முறை மற்றும் அரசியலமைப்பு மாற்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளக்குவதோடு, மனித மூலதன ஆய்வு மையத்தின் தலைவி டொக்டர் சுஜாதா எம். கமகே புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை பற்றி விளக்கமளிக்கவுள்ளார்.

இரண்டாவது அமர்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், புதிய மாகாணசபை தேர்தல் முறை பற்றி விளக்கமளிக்கவுள்ளார். அடுத்து டொக்டர் சுஜாதா எம். கமகே, 50:50 தேர்தல் முறையில் சிறுபான்மை காப்பீடுகளும் எல்லை நிர்ணயமும் என்ற தலைப்பில் விளக்கமளிப்பார். பின்னர், அரசியலமைப்பு சபை வழிநடத்தல் குழு உறுப்பினர் டொக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன, அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையும் சிறுபான்மையும் என்ற தலைப்பில் விளக்கமளிப்பார்.

அதன்பின்னர் பங்குபற்றுபவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கேள்வி - பதில் நிகழ்ச்சி 3 கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக மேலோட்டமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்போர், இச்செயலமர்வில் கலந்துகொண்டு தெளிவுபெற முடியும். அத்துடன் அரசியல் பின்புலன்களையும் யதார்த்தங்களையும் அறிந்துகொள்வதுடன், மாற்றுக் கருத்துகளையும் முன்வைக்க முடியும் எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இச்செயலமர்வில் கலந்துகொள்வோருக்கு குறைந்தளவு ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், பங்குபற்ற விரும்புவோர் 0777731180 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தங்களது விபரங்களை குறுந்தகவல் (SMS) அனுப்பி பதிவுசெய்துகொள்ளவும். பதிவுசெய்வோருக்கு மாத்திரமே பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கப்படும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -