உலோகங்கள் மற்றும் உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டு, கம்பிகளால் இணைக்கப்பட்ட மனித வடிவ இயந்திரம் (ஹூனாய்ட் ரோபோ) ஒன்றுக்கு மனிதர்களைப்போல குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது சர்ச்சைகளை கிளப்பாமல் இருந்தால்தான் அது வியப்பளிக்கும்!
செளதி அரேபியாவின் மக்கள்தொடர்பு விவகாரக் குழு அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் "உலகின் குடியுரிமை பெற்றிருக்கும் முதல் ரோபோ சோஃபியா. செளதி அரசு சோஃபியாவுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.படத்தின் காப்புரிமைTWITTER
சோஃபியாவின் வீடியோ
செளதி அரேபியாவின் கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின்படி, சர்வதேச தகவல் தொடர்பு மையம் இதை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அறிவித்துள்ளதுடன், புதிய செளதி குடிமகளை வரவேற்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.
ஹைன்சன் ரோபாட்டிக்ஸின் இந்த ரோபோ, ரியாத்தில் நடைபெறவுள்ள எதிர்கால முதலீடு பற்றிய மாநாட்டில் பேச்சாளராக கலந்துகொண்டது.
சோஃபியா என்னும் ரோபோ'பெண்'
இருபத்தி ஓராம் நூற்றாண்டின் இனிய இயந்திரா
நாட்டை நவீனமயமாக்குவதற்கு முதலீடுகளை அதிகரிப்பது பற்றி இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும். அல் அராபியா வலைதளத்தின்படி, ரோபோ சோஃபியா, ஒரு அமர்வுக்கு நடுநிலை வகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரேபிய செய்தி நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோவில், குடியுரிமை பெறுவது குறித்து சோஃபியா பேசியிருக்கிறது.(BBC)