காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடகங்களும் மாணவர்களின் பயன்பாடும் எனும் தொனிப்பொருளினான மாணவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு நேற்று 17,10,2017 காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது
பாடசாலை அதிபர் எஸ் எச் பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவாளராக அஷ்ஷெய்ஹ் அஸ்பர் ஹஸன் (பலாஹி) விரிவுரையாற்றினார்.
சமூக ஊடகங்களை பாவிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும்; பயன்பாடுகள் அதனால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் சமூக சீர்கேடுகள் தொடர்பிலும் விரிவுரைகள் இடம்பெற்றன.
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம் கையூம் (ஷர்கி) மீடியாபோரத்தின் தலைவர் எம் எஸ் எம் நூர்தீன் பிரதேச கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன் மொஹிதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல் பேஷ் இமாம் முஸ்தபா மௌலவி மீடியா போரத்தின் செயலாளர் எஸ் எம் முஸ்தபா (பலாஹி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
எதிர்வரும் 19 ம் திகதி காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையிலும் 20ம் திகதி அல்ஹிறா மஹா வித்தியாலயத்திலும் 24ம் திகதி மில்லத் மகளிர் வித்தியாலயத்திலும் இச் செயலமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.