நவாஸ்தீன் -
மலேஷியாவிலிருக்கும் தம்முடன் சற்று முன்னர் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தம்மால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பில் கருத்திற் கொண்டதாகவும் அதற்கமைய நாளைய தினம் நியமனங்களை பெற்றுத் தர முடியுமென உறுதியளித்தாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குறிப்பிட்டார்.
தமது கோரிக்கையை செவியேற்ற கல்வியமைச்சின் செயலாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமது தரவுகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியினை மேம்படுத்த தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதற்கு தாம் தயாரென அவர் குறிப்பிட்டார்,
ஆசிரியர் பிரச்சினையை கோப் குழுவுக்கு கொண்டு செல்லுமளவுக்கு உறுதியுடன் இருந்தமைக்கு கல்வியமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்,