கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சாருக்கு தேசகீர்த்தி விருது

பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மருதமுனையைச் சேர்ந்த எம்.சி.அன்சார் அவர்களின் சமூக சேவையை கௌரவித்து மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் மொகமட் ஷரீக் ஹை தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு துரைராஜ சிங்கம் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சாருக்கு பதக்கம் அணிவித்து விருது மற்றும் சாண்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அகமது லெப்பை முகம்மது காசிம் சாலைக்குட்டி சவ்தா உம்மா தம்பதிக்கு முதல் மகனாக மருதமுனையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியலயத்திலும் உயர்கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும் கற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -